Thursday, July 23, 2009

டாக்டர்(?) விஜய்


என்.எஸ்.கிருஷ்ணன், நாகேஷ், சந்திரபாபு, கவுண்டமணி, செந்தில், வடிவேல், விவேக் மற்றும் யார் யாரோ எவ்வளவோ சிரமம் எடுத்து, தமிழ் சினிமாவில் தனக்கென்று ஓர் இடத்தை தக்க வைத்து கொள்வதில், முயற்சிகள் பல மேற்கொண்டு, தங்களுக்கே உரித்தான தனித்துவம் ஒற்றை கண்டறிந்து, வெற்றி கண்டுள்ளனர். இவர்களையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு தமிழ் சினிமா இதுவரை கண்டிராத திடீர் வளர்ச்சியை, மிகக் குறுகிய காலத்தில் எட்டிப்பிடித்திருப்பவர் நடிகர் விஜய் மட்டும்தான். காமெடி செய்வது என்பது அவ்வளவு எளிதாக அனைவராலும் இயலாத ஒன்று. திரையில் செய்யும் காமெடிக்காக, காமெடி நடிகர்கள் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். கேமரா, ஆகஷன் தொடங்கி கட் சொல்லும் வரையில்தான் காமெடி நடிகர்களின் நடிப்பும், பேச்சும் சிரிப்பை வரவழைக்கிறது; அவ்வளவு காட்சிகள் மட்டும் அந்த திரைப்படத்தின் நகைச்சுவைப் பகுதிகளாக அமைந்தும் விடுகிறது. ஆனால் ஒரு முழுத் திரைப்படத்தையே நகைச்சுவையாக, மக்கள் மீண்டும் மீண்டும் பேசும் அளவிற்கு கொண்டு செல்லும் திறமை விஜய்யிடம் மட்டுமே உள்ளது. இதற்குச் சான்றாக குருவி, வில்லு, வேட்டைக்காரன் (எப்படியும் விழுந்திடுவான் அவன் வலையிலேயே இந்த வேட்டைக்காரன்) படங்களை கூறலாம். இப்படியாக குருவியை வில்லால் வேட்டையாடும் இந்த வேட்டைக்காரனை மின்னஞ்சல் மூலம் நாம் அனைவரும் தினம் தினம் சந்தித்து கொண்டுதான் இருக்கிறோம்.

எல்லோரும் இவர் மூலம் மிகுந்த மகிழ்ச்சியுடன் பணிபுரியும் இடங்களில் தம் பணிகளை தொடர முடிகிறது. எனக்கும் கடவுளை மட்டுமே பழித்து, பழித்து, புளித்து போய்விட்டது. ஏன் நாமும் இந்த மாபெரும் காமெடி நடிகரை வைத்து ஓர் காமெடி ஸ்கிரிப்ட் கொடுக்க கூடாது என்று தோன்ற இதோ, என் பங்கிற்கு.

நாளைக்கு மூன்று - வேளைக்கு மூன்று, என்று மருத்துவர்கள் பங்கிட்டு எழுதி கொடுக்கும் மருந்து மாத்திரைகளுக்கு இன்று வேலையில்லாமல் போய்விட்டது - விஜய் திரைப்படங்கள் மூலம். இதையறிந்த தமிழகத்தின் தலைச்சிறந்த மருத்துவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன், விஜய்க்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்து, அவ்விழாவிற்கு அவரைத் தலைமை தாங்க கேட்டிருந்தார்கள்.



இப்போது நமது களம் : அவ்விழா மேடை.

தலைமை மருத்துவர்: 'இப்போது டாக்டர் விஜய் அவர்கள் உரையாற்றுவார்!.'

(தூங்கி விழித்த கண்களை இன்னும் கழுவாமல், கண்கள் இரண்டையும் மூக்குக்கு நேராக துடைத்தவாறே அனைவருக்கும் கைகளை அசைத்து காட்டியவாறு மைக்குக்கு நேராக சென்று நிற்கிறார். )

டாக்டர் விஜய்: ணா...எல்லாருக்கும் வணக்கங்கண்ணா... டாக்டர்ஸ் ... நம்ம எல்லாரும் .... செய்யுற இந்த பணி ..... ரொம்ப சிரமங்களுக்கு நடுவில்..... செய்யக்கூடிய பணி .... அந்தக் காலத்தில பார்த்தீங்கன்னா நம்ம புரட்சித் தலைவர் ....

(பார்வையாளர்கள் ஒரே குழப்பத்தில் இவர் என்னக் கூறுகிறார் என்பது புரியாமல் அவர்களுக்குள் விவாதிக்க, சிறிதளவு சப்தம் உருவாகிவிடுகிறது)

டேய்... சத்தம் போடாதீங்க ... சத்தம் போடாதேங்குறேன் ... சைலன்ஸ் ....

(கோபத்தில் தன் தலைமுடியை நீவி விடுகிறார்)

(சிறிது நேரத்தில் மக்கள் அனைவரும் தங்கள் தலைவிதியை நினைத்து நொந்து கொண்டு மீண்டும் அவர் என்னதான் சொல்லப்போகிறார் என்று கேட்கத் தயாராகிறார்கள்)

இப்போ பாத்தீங்கன்னா ... ஒரு குருவிக்கு ஒருகால் அடிபட்டு விழுந்தாக்கூட ... டாக்டர் ஒருத்தர் சரியான நேரத்துல மருந்து போட்டு ...

அந்த குருவியோட காயத்துக்கு சிகிச்சை அளிக்க முடியும் ... அதே மாதிரி .... குழந்தைங்க கில்லி விளையாடிட்டு மண்டைய உடைச்சிக்கிட்டாலோ .... போக்கிரி பயலுக அடிவச்சு .... ரத்தக் களரியோட வந்தாலோ .... முதல்ல ஓடி வர்றது டாக்டர்ஸ்தான். ... அப்படிப்பட்ட புனிதமான தொழில்ல தான் மக்களுக்காக நாங்க செய்யுறோம். ....

(மக்கள் இன்னும் குழப்பத்தில், மண்டையை சொறிந்துகொண்டே இதற்க்கு அவருடைய படங்களே மேல், என்று மனதில் எண்ணுகிறார்கள்)

தமிழகத்தில் பார்த்தீங்கன்னா .... டாக்டர் கமல் அவர்கள்தான் ஒரு யூனிவெர்சிட்டி .... நானெல்லாம் ஒரு ஸ்டுடென்ட் தான் .... அதுக்கப்புறம் டாக்டர் .....

(தலைமை மருத்துவர்: (மனதிற்குள்) அடப்பாவி இவனுக்கு மருத்துவ தொழில் செய்யும் டாக்டருக்கும், இவன மாதிரி பொறுக்கிங்க காசு குடுத்து வாங்குற டாக்டர் பட்டத்துக்கும் கூட வித்தியாசம் தெரியலய்யே .... )

மக்கள்: ? ... ? ... ?... ?....



(மருத்துவமனை வளாகத்திற்குள் ஆம்புலன்ஸ் இரண்டு வேகமாக நுழைகிறது. தீ விபத்து ஒன்றில் தீக்காயம் பட்டவர்களை இந்த மருத்துவமனைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இதைப் பார்த்த அனைத்து மருத்துவர்களும் மேடையிலிருந்து அவசர சிகிச்சைப் பிரிவை நோக்கி ஓடுகிறார்கள். விஜய்யும் வேகமாக மேடையிலிருந்து இறங்கி செல்லத் தயாராகிறார்.)



தலைமை மருத்துவர்: விஜய் நீங்க பேசிக்கிட்டு இருங்க நாங்க இதோ இப்போ வந்திடுறோம் !.



டாக்டர் விஜய்: நானும் வர்றேன் டாக்டர் ...



தலைமை மருத்துவர்: ஐயோ வேணாம். நீங்க பேச வந்த இடத்தில எதுக்கு உங்களுக்கு சிரமம் ? ...



டாக்டர் விஜய்: நானும் டாக்டர் தான்யா ....



தலைமை மருத்துவர்: ?.... ?.... ? .....



டாக்டர் விஜய்: அம்மா சத்தியமா நானும் டாக்டர் தான்யா .... பாக்கலியா நீ .... இவ்வளவு நேரமா உங்களுக்கு சமமா பேசிக்கிட்டு இருந்தேனே ....



தலைமை மருத்துவர்: ? .... ? ..... ?....



டாக்டர் விஜய்: டாக்டர் னு சொல்றேன் நம்ப மாட்டேங்குறாங்களே .... நான் ICU போறேன் .... ICU போறேன் .... ICU போறேன் .... நானும் டாக்டர் தான் .....